புதிய கட்சி UNP இல்லை அது SJB – சஜித் விளக்கம்

சமகி ஜாதிக பலவேகய எனும் சஜித்தின் புதிய கட்சியை , ஆங்கில பெயர் United National Power என வருவதகவும், அதனை சுருக்கினால் UNP என பெயர் வருவதாகவும் அது தமது கட்சியின் எதிர்காலத்திற்கு சிக்கலை விளைவிக்கும் என யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அத்தகைய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என கோரி யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்ரினையும் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் அவர் அனுப்பியுள்ள கடிதம் ஒரு ஆதாரமற்ற கடிதம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்த திருத்தங்களின் படி தனது கூட்டணியின் பெயர் “சமகி ஜாதிக பலவேகய” எனவும் அதை ஆணைக்குழு பயன்படுத்துவது SJB எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அடையாளத்திற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறிய சஜித், UNP சட்ட ஆலோசகர், புதிய கூட்டணியின் பெயரை தவறாக சித்தரித்து கொண்டு கடிதம் வெளியிட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like