3 பேருடன் திருமணம்!… குழந்தைக்கு சண்டையிடும் 4வது ரகசிய காதலன்

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் மூன்று திருமணங்களை செய்த இளம்பெண்ணின் குழந்தைக்கு நான் தான் தந்தை என 4வது நபர் சண்டையிடுவதால் பொலிசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராமநாதபுரத்தின் கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா, இவர் தன்னுடைய 8 மாத குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து விசாரணைக்காக குழந்தையுடன் நேரில் ஆஜராகுமாறு கல்பனாவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கல்பனாவுக்கு திருமணமான நிலையில், வேலைக்கு சென்ற போது வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, இதை தெரிந்து கொண்ட முதல் கணவர் விவாகரத்து செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து வினோத்துடன் கல்பனா வசித்து வந்துள்ளார், இந்நிலையில் வெளிநாடு சென்ற வினோத் அங்கேயே இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

இதனால் நொந்து போன கல்பனா, நான்கே மாதங்களில் மாற்றுத்திறனாளி ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இது தங்களுடைய குழந்தை என வினோத்தின் உறவினர்கள் சண்டையிட, 4வதாக சரத் என்பவர் என்னுடைய குழந்தை என பொலிசிடம் புகார் கொடுத்துள்ளார்.

2வது கணவரான வினோத் வெளிநாடு சென்ற இடைவெளியில் அந்தப் பெண்ணுடன் தாம் பழகியதாகவும் அதன் மூலம் பிறந்ததே அந்தக் குழந்தை என்றும் சரத் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகாரை மறுத்துள்ள அவரது புகாரை மறுக்கும் அந்தப் பெண், அது வினோத்தின் குழந்தைதான் எனக் கூறுகிறார்.

இதனால் குழம்பிபோன அதிகாரிகள், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்துவிட்டனர், டிஎன்ஏ பரிசோதனைக்கு பின்னர் குழந்தை உரியவர்களிடம் கொடுக்கப்படும் என கூறி அனைவரையும் அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like