திடீரென கேட்ட சத்தம்.. பதறியடித்து மனைவி குழந்தையை காப்பாற்றிய கணவனுக்கு நேர்ந்த துயரம்..!

தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற கணவருக்கு 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உம் அல் குவைன் அடுக்குமாடி குடியிருப்பில், அனில் நினான் (32) என்பவர் அவரது மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன் அரபு நாட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாட்களுக்கு முன், வீட்டில் உள்ள மின்சார பெட்டி ஒன்று மின்கசிவு காரணமாக திடீரென்று வெடித்து சிதறி தீப்பிடித்துக் பற்றிக் கொண்டது.

அப்போது, அங்கு தனது மனைவியை காப்பாற்ற பெட்ரூமில் இருந்து அனில் நினான் வந்துள்ளார். அப்போது அவர் தீயின் பிடியில் சிக்கி இருந்த மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார், அப்போது அவரும் பலத்த காயம் அடைந்தார். பின்னர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தின் மூலம் மனைவிக்கும் 10 சதவீத காயங்கள் மட்டுமே அடைந்த நிலையில் தற்போது இவர் உடல்நிலை தேறி ஆபத்தான நிலையை கடந்தார்.

ஆனால் மனைவியை காப்பாற்ற போராடிய கணவனுக்கு 90% தீ பற்றிக் கொண்டதால் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அவர்களது உறவினர்களையும், அங்கிருப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like