மெக்ஸிகோவிலிருந்து தபாலில் கொழும்பிற்கு வந்த பொருள்! அதிர்ச்சியில் அதிகாரிகள்

கொழும்பு மத்­திய அஞ்சல் பரி­மாற்று நிலை­யத்தில், மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து தபால் மூலம் அனுப்­பப்­பட்ட ஐஸ் போதைப்­பொ­ரு­ளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இந்த சம்­பவம் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

போதைப்­பொருள் தடுப்பு பிரி­விற்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்­க­மைய, மெக்­ஸி­கோ­வி­லி­ருந்து கொழும்பு மத்­திய அஞ்சல் பரி­மாற்ற நிலை­யத்­துக்கு தபால் மூலம் அனுப்­பப்­பட்ட சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதி­யொன்று சோத­னை­யி­டப்­பட்­டுள்­ளது.

இதன்­போது குறித்த பொதி­யி­லி­ருந்து 502 கிராம் ஐஸ் போதைப்­பொருள் மீட்­கப்­பட்­டுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனையடுத்து குறித்த பொதி­யினை பெற்­றுக்­கொள்ள வந்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பன்­னிப்­பிட்­டிய – பெலென்­வத்த பகு­தியைச் சேர்ந்த 29 வய­து­டைய ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூரியுள்ளனர்.

இதனையடுத்து கைதான சந்தேக நபரிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like