தமிழர்களை ஏமாற்றிய நீதித்துறை : 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கட்டாயமாக காணாமல் ஆக்கியது தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணையில் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொடவுக்கு உயர்நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி மூன்றாவது தடவையாக பொலிஸ் மா அதிபர் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி மூலம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டவாதி ஜெனரல் சரத் ஜெயமன்னே பெடகனா மற்றும் கிருலாபோன் ஆகிய இடங்களில் அமைந்துள்ள முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட அவர்களின் வதிவிடங்கள் மூடப்பட்டிருப்பதால் நீதிமன்றம் அனுப்பிய முதல் இரண்டு சம்மன்களும் அவரிடம் சேர்ப்பிக்க முடியவில்லை என்றும் அவரின் வதிவிடம் குறித்த தகவல் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் 04/02/2020 அன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இலங்கையின் சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா அவர்களின் அருகில் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட அமர்ந்து இருந்தார்

மூன்று நாள் கழித்து 07/02/2020 அன்று நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா அருகில் அமர்ந்து இருந்த முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட குறித்து எந்த தகவல் இல்லை சொல்லுகிறது சட்டமா அதிபர் திணைக்களம்

இலங்கை அரசும் அதன் நீதித்துறையும் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்காது என்பதை விளக்குவதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like