கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை? மிரளும் தமிழர்கள்! சீ.வீ.கே எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய தொல்பொருள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சிற்குள் கொண்டு வருவது பொருத்தமான விடயமல்ல என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து தமிழ் மக்களின் வரலாற்றைத் திரிவுபடுத்த எத்தணிப்பதாகவே எண்ணுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஏற்கனவே, தொல்பொருள் திணைக்களம்தான் தமிழர்களின் பூர்வீகம், புராதனம் உள்ளிட்ட அனைத்தையும் மழுங்கடித்து இயங்குகின்றது.

வடக்கில் பெரியளவில் வேறு புராதனங்கள் இல்லை. கூடுதலாக தமிழ் சைவர்களின் புராதன தொல்பொருள் ஆய்வுகள் தான் உள்ளன.

இவற்றை எல்லாம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒடுக்குவதற்கான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கலாம். வெளிப்படையாகக் குடியியல் நிர்வாகத்திற்குட்பட்ட விடயத்தை பாதுகாப்பு அமைச்சிற்குள்ளே கொண்டுவருவது பொருத்தமானதல்ல.

ஒரு அச்சுறுத்தல் மூலமாக தாங்கள் தெரிவு செய்யும் அல்லது தீர்மானிக்கும் விடயத்தை தமிழ் மக்களிடம் திணித்து தமிழ் மக்களின் வரலாற்றை திரிவுபடுத்துவதற்கு எத்தணிக்கும் செயற்பாடாகவே இதைப் பார்க்கலாம் என்று குறிப்பிட்டார்.