இதுதான் காதலர் தினமா.? உண்மையின் ரகசியம்.! காதலை நேசிப்போம்.!

பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து காதல் ஜோடிகளுக்கு எங்களது காதலர் தினம் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.

காதலர் தினம் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது, ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ் போன்றவர்கள் அடையாளமாகத் திகழ்கின்றனர். மேலும் காதலர்களுக்கு ஒரு அடையாளமாக சின்னமாக இருப்பது மும்தாஜிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் என்பதாகும். இவர்களது காதல் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் கேள்விப்பட்டிருப்பார்கள்.

இதுதான் காதலர் தினமா.? உண்மையின் ரகசியம்.! காதலை நேசிப்போம்.!

மேலும் அதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவதும் இல்லை. ஏனென்றால் அவர்களது காதல் அவர்களுக்கு பெரியது. இதனிடையே ஒரு சிறிய கதையை பார்ப்போம், கி.பி.14ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற ரோம சாம்ராஜ்யத்தை ஆண்டவர் இரண்டாம் கிளாடியஸ் என்பவர், இவரது ராணுவத்தில் திடீரென ஆட்கள் பற்றாகுறையால், இளைஞர்கள் திருமணத்தை தவிர்த்து, கட்டாயம் ராணுவத்திற்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார். ஏனெனில் திருமண செய்வதற்கு தயாராக உள்ளவரை கட்டாயப்படுத்த அப்போதைய அந்நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதான் காதலர் தினமா.? உண்மையின் ரகசியம்.! காதலை நேசிப்போம்.!

இதற்கு அப்போது வாழ்ந்த வாலன்டைன் எனும் பாதிரியார் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணமும செய்து வைத்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. இதனால் செயலால் ஆத்திரமடைந்த அரசர், அவருக்கு மரணதண்டனையை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் இருந்த நாளான பிப்,14-ம் தேதியை இளைஞர்கள் வாலன்டைன் தினமாகவும் கொண்டாட தொடங்கினர். அதன்பின் 20-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாலன்டைன் தினம் காதலர் தினமாக மாறியது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் காதல் என்பது ஒரு பொருளையோ அல்லது மனிதரையோ பிடித்துவிட்டால் அதுவே ஒரு காதல். காதல் வைத்துக்கொள்ளுவது நல்ல ஒரு உறவு. இதில் எல்லை மீறினால் இருந்தால் நீண்ட நாட்களுக்கு இனிமையாக இருக்கும். அனைவருக்கும் மீண்டும் யாழ்தீபம் சார்பாக காதலர் தின வாழ்த்துக்கள்.