யாழ் மாநகரசபை மேயர் ”இம்மானுவேல் ஆர்னோல்ட்”; கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களிற்கிடையில் தெரிவு!

இன்றைய தினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமானது யாழ் மாட்டின் ரோட்டில் உள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஆகிய அமைப்புக்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் யாழ் மாநகரசபை மேயர் ”இம்மானுவேல் ஆர்னோல்ட்”, துணை மேயராக “ரெலோ” சார்பில் போட்டியிட்ட, துரைராசா ஈசன் என்பவரும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களிற்கிடையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

இதேவேளை இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ, அன்றில் ஏனைய கட்சிகளோ எதிர்த்தால், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்களிற்கிடையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை மேயர் ”இம்மானுவேல் ஆர்னோல்ட்” என்பவரின் தெரிவுக்கு, ஏனைய கட்சிகள் ஆதரவு தரவும் “கோரிக்கை முன்வைப்பதெனவும்” தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like