30 வருடமாக அரச சேவையில் இருந்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் ஓய்வுபெற 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் பழிவாங்கல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

30 வருடங்களாக அரச சேவையில் இருந்த அவர் பதவி விலகியுள்ள நிலையில் , இன்று புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் பதவியேற்கவுள்ளாா்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து வடமாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலா்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்யும் முயற்சியாக கடந்த 5ம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்சை ஏற்பட்டது.

வடக்கு மாகாணத்தின் இரு மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு அதில் ஒருவர் சிங்களவராக நியமிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய மூன்று மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் இடமாற்றம் செய்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும், மட்டக்களப்பைச் சேர்ந்த அமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வவுனியாவைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் மன்னார் மாட்டத்திற்கும் மாற்றுவதற்கு அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில் மே மாதம் 27 ம் திகதியுடன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளா் ஓய்வுபெறவுள்ள நிலையிலும் மக்களால் நிராகாிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் விடாத முயற்சியினால் அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் யூலை 21ம் திகதியுடன் மன்னார் மாவட்டச் செயலாளரும் ஓய்வு பெறும் நிலையிலும் அரசியல் காரணமாக குறித்த அவசர இடமாற்றம் நேற்று மாலை அவருக்கு தொலை நகல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.