ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)

ஈகைப் பேரொளி முருகதாசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை 12/02/2018 நடை பெற்றுள்ளது ,
ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த நினைவு வணக்க நிகழ்வு 12.02.2018 அன்று மதியம் 11:30 மணியில் இருந்து 13.00 மணிவரை ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium,
Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் நடைபெற்றது

உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிரை ஆயுதமாக்கி உடலில் தீயிட்டு வீரச்சாவடைந்து சர்வதேசங்களையும், உறங்கிக்கொண்டிருந்த உலகத் தமிழர்களையும் விழிப்படையச் செய்த 21 ஈகியர்களுக்கும் லண்டன் வாழ் தமிழர்களினால் மலர்தூவி மனம் நெகிழ்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட இலண்டனில் வசித்து வந்த முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like