அரசியல் பேசுவதில்லை அபிவிருத்தியை மட்டும் முன்னேற்றுவொம்

பிரதேசங்களின் அபிவிருத்தியை மையமாக வைத்து தனிமனித விருப்பு வெறுப்புக்களை களைந்து
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தொகுதிகளில் தமிழ் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் அடிப்படையில் ஆட்சியை நிர்வகிக்கும் முடிவிற்கு தமிழ் கட்சிகளின் உயர் மட்ட தலைவர்களின் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களிற்கான தீர்வை நோக்கி கொள்கையின்பால் ஒன்றாக பயணிக்கின்ற தமிழ்க் கட்சிகள் இணைந்து பயணிக்கின்ற காலம் தற்போது ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

அத்துடன் வெற்றி பெற்ற தமிழ்
கட்சிகளும் மற்றைய கட்சிகளுடன் இரகசியமாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர்.இதன்போது உள்ளூராட்சி சபையில் அரசியல் பேசுவதில்லை அபிவிருத்தியை மட்டும் முன்னேற்றுவொம் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் தனித்து ஆட்சி நடத்தமுடியாதவாறு மக்கள் உறுப்பினர்களை தெரிவுசெய்தனர்.

வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவதாகவும் தமிழ் காங்கிரஸ் இரண்டாவதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றாவதாகவும் வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது சம்மந்தமாக தெளிவுபடுத்தும் முகமாக இன்று மாலை 3:00 மணிக்கு யாழில் ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடாத்துவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .