வட்டுவாகல் கடற்படை முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் படகு

விடுதலைப் புலிகளின் விசேட கடல்வழி தாக்குதல் படகு ஒன்று வட்டுவாகல் கடற்படை முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட படகே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு மார்ச் 26, தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கைக்கையின் போது குறித்த படகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கையின் போது வெற்றிலைக்கேணியில் இருந்து கடல் வழியே பாரியளவிலான படை நகர்வொன்றை விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர்.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கடற்படையினாரால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்று வட்டுவாகல் கடற்படை முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.