#Breaking: அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு.!

நெய்வேலியில் உள்ள என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அனல் மின் நிலையம் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், 2022-ம் ஆண்டுக்குள் படிப்படியாக மூடவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் என்பதால் மூட உத்தரவு. இந்த நிலையில் முதலாவது அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது என குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே முதலாவது அனல்மின் நிலையத்தின் பணிகள் 1962-ல் இருந்து 1970 வரை நடைபெற்று நிறைவடைந்தது என மத்திய அரசு குறிப்பிட்டது.