யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு தொடர்பில் மஹிந்த – கோட்டாபயவின் அதிரடி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கின் சில இடங்களில் பொதுஜன பெரமுன போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அந்த பகுதிகளில் பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

வடக்கு, கிழக்கில் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கி வாக்கு சேகரிப்பது, கல்லில் நார் உரிப்பதற்கு சமன் என்பது பெரமுனவிற்கு இப்பொழுது நன்றாகவே புரிந்துள்ளது.

குறைந்த பட்சம் ஏதாவது அதிசயம் நிகழலாமென்ற பெரமுனவின் எதிர்பார்ப்பும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொய்யாகி விட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தமது பங்காளிகள் செல்வாக்க உள்ள பகுதிகளை அவர்களிடமே பெரமுன விட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் பெரமுன போட்டியிடாது.

இந்த மாவட்டங்களில், அந்த பகுதிகளில் செல்வாக்காக உள்ள அவர்களின் பங்காளிக் கட்சிகள் களமிறங்கவுள்ளன.

யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் ஈ.பி.டீ.பி, சு.க ஆகியன தமது சொந்த சின்னத்தில் களமிறங்கும். மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், வியாழேந்திரனின் முற்போக்கு தமிழர் அமைப்பு ஆகியன களமிறங்கவுள்ளன.

வன்னியில் பொதுஜன பெரமுன களமிறங்கினாலும், வாசுதேவ நாயணக்காரவின் கட்சி சின்னத்தில் வன்னியில் பிரபா கணேசன் களமிறங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.