மஹிந்தவின் கட்சி வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் வயோதிபர் மரணம்

மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுண கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் பாரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியை தாங்க முடியாத நிலையில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் அம்பலாங்கொடையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடைப் பிரதேசத்தில் பொது ஜன பெரமுண கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்த குறித்த நபர் தான் ஆதரிக்கும் கட்சி அம்பலாங்கொடையில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் பெரும் வெற்றியடைந்துள்ளமை குறித்து பெரிதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து நேற்று மாலை வரை சந்தோசமாக பாடல்களைப் பாடி மகிழ்ச்சியுடனிருந்த நபர் ”மஹிந்தவின் கட்சி வெற்றிபெற்றுவிட்டது. தான் இனி மரணித்தாலும் பரவாயில்லை” என்றவாறே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்துள்ளார். அதனையடுத்து படுக்கையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமது தகப்பனார் அவர் ஆதரித்த கட்சியின் பெருவெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத சந்தோசத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று அவரது பிள்ளைகள் சாட்சியமளித்துள்ளனர்.

மஹிந்தவின் கட்சி வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் வயோதிபர் மரணம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like