யாழில் புடவைக்கடைக்குள் கஞ்சா வியாபாரம்…! சிக்கிய முஸ்லீம் முதலாளி!

யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டுபிடித்த பொலிஸாா், விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகரை கைது செய்துள்ளனா்.

வெளியே புடவை விற்பனை நிலையமாகவும், உள்ளே கஞ்சா விற்பனை நிலையமாகவும் இயங்கிவந்த குறித்த நிலையம் தொடா்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த விற்பனை நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகா் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பருத்துறை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.