எங்களுடைய மண் சிங்கள பௌத்த பூமியாக மாறப்போகிறதா என சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நான் இன்று கூட்டத்திற்காக வந்த போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தாண்டி வந்தேன்.
அந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னால் சில சிங்கள சகோதர சகோதரிகள் கைகளை பிடித்தவாறு, கட்டிப்பிடித்தவாறு நடந்து போய் கொண்டிருந்தார்கள்.
என்னுடைய மனம் குமுறியது. நாளைக்கு என்னுடைய பிள்ளை இந்த பல்கலைக்கழகத்திற்கு போனால் இப்படித் தான் போகப்போகின்றாரா?
எங்களுடைய கலாச்சாரம் அழியப் போகிறதா? பண்பாடு தொலையப் போகிறதா? எங்களுடைய மண் சிங்கள பௌத்த பூமியாக மாறப் போகிறதா? ஒரு ஏக்கம் வந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.






