கொழும்பு பத்தரமுல்லையில் பதற்றம்!

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள காணி அமைச்சின் வளாகத்தில் முற்றுகையிட்ட மாணவர்களால் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின் அவர்கள் காணி அமைச்சின் வளாகத்திற்குள் திடீரென பிரவேசித்ததை அடுத்து அவர்களைத் தடுக்க அங்கு பொலிஸாரும், பாதுகாப்பு பிரிவினரும் முயற்சி செய்தனர்.

எனினும் அந்த தடைகளை மீறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைச்சின் வளாகத்திற்குள் நுழைத்துள்ளனர்.

தற்போது காணி அமைச்சின் வளாகம் பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.