பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.

(02) வெள்ளிக்கிழமை ஆலய பங்குதந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோராஸ் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் திருப்பலி பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றுவந்தன.

(10) சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து ஆலயத்தில் விசேட திருப்பலியும் நடைபெற்றது.

(11) காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தலைமையில் பங்குதந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோராஸ், அருட்தந்தை நவாஜி, அருட்தந்தை , றோசான் , அருட்தந்தை போல் சற்குணநாயகம் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுத்தனர்

நடைபெற்ற விசேட திருப்பலியில் பங்கு மாணவர்களுக்கு ,புதுநன்மை ,உறுதிப்பூசுதல் ஆகிய தேவதிரவிய அருள் அடையாளங்கள் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழங்கப்பட்டது

திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் விசேட ஆசிர் வாத நிகழ்வுடன் கொடியிறக்கத்துடன் திருவிழா சிறப்பாக நிறைவுபெற்றது

இந்த திருவிழா திருப்பலியில் மட்;டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like