வடமாகாண ஆளுநா் தொடர்பில் அதிகாரிகள் விசனம்! அம்பலமான கடிதம்

வடமாகாண ஆளுநா் திருமதி சார்ள்ஸ் பதவியை பொறுப்பேற்று சில மாதங்களேயாகும் நிலையில், தனக்கு தொிந்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்யுமாரு ஜனாதிபதிக்கு ஆளுநா் எழுதிய கடிதம் தற்போது அம்பலமாகியுள்ளது.

இந் நிலையில், ஆளுநரின் இந்த செயல்பாடு தொடர்பில் அதிகாாிகள் மட்டத்தில் விசனம் தோன்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சோ்ந்தவா்களையே மாவட்ட செயலா்களாக நியமனம் செய்யவேண் டும் என ஆளுநா் கேட்பதாக முன்னா் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனாலும் அது உறுதிப்ப டுத்தப்படாத நிலையில், தனக்கு தொிந்த தன்னோடு முன்னா் வேலை பாா்த்த ஒருவருக்கு வட மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் செயலாளா் பதவி வழங்கப்படவேண டும் என ஆளுநா் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் , மாவட்ட செயலா் பதவி கிடைக்க வேண்டிய நிலையில் நிராகாிக்கப்பட்ட அதிகாாி ஒருவாின் கைகளுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அந்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மிக நீண்டகாலம் யுத்தம் மற்றும் நெருக் கடிகளுக்கு மத்தியில் பணியாற்றிய பல தகுதிவாய்ந்த அதிகாாிகள் இங்குள்ள நிலையில் ஆளுநாின் தான்தோன்றித்தனமான இந்த செயற்பாடு வடக்கு அதிகாாிகள் மட்டத்தில் பெரும் விசனத்தை உண்டாக்கியுள்ளது.

அத்துடன், ஆளுநா் தன் வழங்கமான செயற்பாட்டை ஆரம்பித் துவிட்டதாகவும் அதிகாரிகள் மட்டத்தில் விமா்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.