வரலாற்றில் முதல் தடவையாக நீதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட அதியுச்ச தண்டனை

ஹோமாகம முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற வழக்கில் குற்றவாளி என இனங்காணப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றமை சம்பந்தமான வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கை வரலாற்றில் நீதிபதி ஒருவருக்கு எதிராக வழங்கப்பட்ட அதியுச்ச தண்டனையாக இது உள்ளது என நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.