கருணாவின் தலையீட்டால் சாய்ந்தமருது நகர சபைக்கு நேர்ந்த கதி! கடும் கோபத்தில் கோட்டாபய..

அன்மையில் வர்த்தமானி பிரசுரம் மூலம் தரமுயர்த்தப்பட்ட சாய்ந்தமருது நகர சபை விடயத்ததை தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி இன முரண்பாடு இல்லாத வகையில் இரு பிரதேச செயலகங்களையும் ஒரே வர்த்தமானியில் தரம் உயர்த்துவது நல்லது என கருத்துத் தெரிவித்தார்.

இதனால் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கருணாவின் கருத்திற்கு இனங்க ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அரசாங்கம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச தமிழ் செயலக தரமுயர்த்தல் இது வரையிலும் தரமுயர்த்தப்படாத நிலையில் அதற்கான தரமுயர்த்தல் முன்னெடுப்புக்கள் இடம்பெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரைக்கும் சாய்ந்தமருது நகர சபை விடயத்ததை தடுத்து நிறுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இனிவருங் நாட்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் இடம்பெற்ற பின்னரே சாய்ந்தமருது விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என கோட்டாபய திட்டவட்டமாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனிடம் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை நடைபெற்றிருந்த அமைச்சரவை சந்திப்பின்போது, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.