யாழ். பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்களின் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.
இன்று மாலை குறித்த சம்பவம் பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் திருத்த வேலை முடிந்து தந்தையும் மகளும் அதில் பயணித்தவேளை ஏற்பட்ட எரிபொருள் ஒழுக்கு காரணமாகவே இவ்வாறு தீப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்தவர்கள் உடனடியாக உதவிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் பாதிப்பு எதுவுமின்றி தப்பித்தனர்.







