கண்டியில் கடந்த வாரம் லொத்தர் சீட்டில் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் 1.6 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், லொத்தர் சீட்டு வென்ற பின்னர் இவ்வாறு ஹெரோயின் கொள்வனவு செய்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் அவர் கண்டி மாநாகர சபையின் பணியாளராக பணியாற்றி வருகின்றார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு குறித்த நபர் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற நிலையில் அந்த பணத்தில் 4 லட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதிக்காக ஒதுக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
பணம் வென்ற சில நாட்களிலேயே அவர் சில நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.






