நான் உண்மையில் இதைப் பற்றி விவாதித்தபோது, இந்த நேரத்தில் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் எங்களுடையவர்கள் கேட்கவில்லை. அரசை எடுத்து நடத்துவோம் என்றார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு வேலைகளை ஏன் செய்யவில்லை? ஒரு கட்சி ஒன்று சொல்லும்போது, மற்றொன்றை மற்றொரு கட்சி கூறியது. மைத்திரிபால சிறிசேனாவின் திட்டத்தை ரணில் எதிர்த்தார்.
ரணில் முன் மொழிந்த போது ஜனாதிபதி மைத்திரிபால ஆட்சேபித்தார். எனவே அதுதான் அவர்களுக்குள் போராட்டமாக இருந்தது. இதனால் சென்ற அரசினால் பல விடயங்களை செய்ய முடியவில்லை.
எதிர்க்கட்சிகளுக்கு அதிக பலமுள்ளதால் முன்னேற முடியாத நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்தேன்.
மார்ச் முதல் தேதிக்குப் பிறகு எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்குச் செல்வதற்கான முதல் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது.” என்று பிரதமர் மஹிந்த அவர்கள் கடந்த 21ம் திகதி கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.