புதிய இணைப்பு
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் மோதிய ஹயஸ் வாகனம் ஆகியன முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்துள்ளன.
மேலும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15இற்றும் மேலதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் சற்று முன்னர் ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை சந்தியில், கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு சென்ற அரச பேருந்தொன்றும் எதிர்த் திசையில் வந்த ஹயஸ் வாகனம் ஒன்று மோதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது அரச பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலனஸ் வண்டிகள் ஆகியன விரைந்துள்ளன.






