சீனாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த துயரம்… மருத்துவர்கள் பலி! தொடரும் அபாயம்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 2,466 பேர் உலகம் முழுவதிலும் உயிரிழந்துள்ளனர். 78,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனா கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை, பொது சுகாதார அவசரநிலை, இது எங்களுக்கு நெருக்கடி மற்றும் சோதனை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த இடமான ஹுபேவின் Xiaogan Central மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து வந்த Huang Wenjun என்ற 42 வயது மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று மாலை உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

இதை சுகாதார துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இவர் இறந்து 24 மணி நேரம் கூட முழுமையாக ஆகாத நிலையில், Wuhan-ன் Union Jiangbei மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த பெண் மருத்துவர் Xia Sisi உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 19-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், அதன் பின் Zhongnan Hospital of Wuhan University-க்கு நிலைமை மிகவும் மோசமானதால் மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் தொடர்ந்து பலியாகி வருவதால், சீன மக்கள் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில், நீங்கள் எங்களின் ஹீரோக்கள், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.