மாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி!

மாணவிகளின் விடுதிக்குள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் பதுங்கியிருப்பதை கையும் களவுமாக பாதுகாவலர்கள் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள மாணவியர் விடுதியில் குறிப்பிட்ட மாணவியின் அறைக்கு ஒரு மாணவன் அடிக்கடி வந்து செல்வதை மாணவியின் ஒருவர் கவனித்துள்ளனர்.

பலமுறை எச்சரித்தும் மாணவன் கேட்காததால் அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த நாட்களுக்கு முன் மாணவியின் அறைக்கு, அந்த மாணவன் சென்றுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அப்போது, அதை வெளியிலிருந்து பார்த்த மாணவி விடுதியின் அறைக்கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டனர். பின்னர் விடுதி வார்டன் மற்றும் பாதுகாவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, பாதுகாவலர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு மாணவியை தவிர யாரும் இல்லை. இருப்பினும் அனைத்து கட்டில்களையும் தூக்கி பார்த்தபோது, ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியில் வந்த அவரிடம் பாதுகாவலர்கள் விசாரணை நடத்தினர்.

இதன் பின்னர் மாணவன், மாணவி இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். மாணவியின் அறைக்கு மாணவன் ஏன் சென்றார் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது.

இதற்கிடையே மாணவனை பாதுகாவலர்கள் தேடும் செல்போன் வீடியோவை, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து வீடியோவை வெளியிட்ட பணியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

குறித்த வீடியோ காணொளியை இங்கே க்ளிக் செய்து காணலாம்….

Get real time updates directly on you device, subscribe now.

You might also like