யாழ் பிரதான வீதியில் பலியான கோடீஸ்வரர் குடும்பத்திற்கு யார் பொறுப்பு? பதற வைக்கும் ஒரு ஆதங்கம்

நேற்று முன்தினம் நடந்த ஓர் சோக சம்பவத்தை வலைத்தளங்களில் பார்த்து அறிந்த போது ரொம்ப வேதனையின் வலிகளின் இடையே மனம் உடைந்து போனேன் நானும் ஓர் சாரதி என்பதால், எப்படி இருந்தாலும் உங்களின் மூர்க்கமான அவசர புத்தியால் ஒரு காயமடைந்த சாரதியை உயிருடன் போட்டு எரித்த செயல் தவறானதே.

கொழுப்பில் இருந்து பருத்திதுறையை நோக்கி பயணித்த பேருந்தும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியிருந்து கொழுப்பை நோக்கி பயணித்த வானும் வவுனியா ஓமந்தை பிரதேசத்தை அண்டிய பன்றிக்கெய்தகுளம் எனும் இடத்தில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

இந்த விபத்தின் போது 5 பேர் ஸ்தலத்தில் இறந்ததாகவும் 25 பேர் கடுமையான காயங்களுடன் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என செய்தியில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் மோதுண்ட அரச பேருந்து மீது ஒருசிலர் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகிறது.

அரச பேருந்துக்கு தீ வைத்த நிலையில் மோதுண்ட இரு வாகனமும் எரிந்த போது வானை செலுத்தி வந்த சாரதி கடுமையான காயங்களுடன் வேனில் உயிருடன் இருந்த போது பேருந்து மீது வைக்கப்பட்ட தீ பரவி வான் சாரதியும் தீயில் எரிந்திருப்பது தான் வேதனை.

எப்படி ஆயினும் அரச பேருந்து மீது வைக்கப்பட்ட தீயே வான் சாரதி இறப்பதற்கான காரணம் என அறிய முடிகிறது.

ஆகையால் அரச பேருந்து மீது தீயிட்ட நபர்களை இனம் கண்டு அவர்களின் இவ்வாறான மூர்க்க செயலுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானது.

பொதுவாக வாகனம் செல்லுத்தும் எந்தவொரு சாரதியும் வேண்டுமென விபத்தினை ஏற்படுத்தி உயிர் உடமைச் சேதங்களை உண்டாக்குவதில்லை என்ற உண்மையை மக்கள் முதலில் உணர வேண்டும்.

அப்போதுதான் இவ்வாறான மூர்க்க செயல்கள் தவிர்க்கப்படும் இதேவேளை இவர்களின் அறியாமையின் உணர்ச்சியின் மூர்க்கத்தனம் தான் இன்று ஓர் உயிரை பறித்திருக்கிறது என்பது உண்மை என எல்லோரும் மனதளவில் உணர்ந்திட வேண்டும்.

இதன் போது ஸ்தலத்தில் இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதே போல் தங்களின் உயிரையும் தங்களை நம்பி பயணிக்க வரும் பயணிகளின் உயிர்களையும் சேர்த்து பறித்து விடும் அளவுக்கு சாரதிகளின் எண்ணமும் இல்லை.

விபத்து என்பது கண்மூடி முழிக்கும் ஒரு செக்கனில் நடந்தெறும் என்பதே நான் பார்த்த உண்மை சாரதி வேண்டுமென செய்தார் என கூறுவது அந்த உண்மையை அறியாத அறிவற்ற மனிதர்களின் எண்ணம் மட்டுமே ஒழிய அது ஒருபோதும் உண்மையல்ல.

ஆகையால் வாகனத்தை செல்லுத்தி வரும் சாரதியை அடிப்பதும் வாகனத்தை தீயிட்டு எரிப்பதும் தவறானது அதே போல் உங்களின் ஆதங்கத்தை அவர்களின் மீதோ அல்லது வாகனத்தின் மீதோ காட்ட முற்படும் செயல் எந்த பயனையும் தரப்போவதில்லை…

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் சொந்த நாட்டுக்காரர்கள் என்றால் தங்களின் மொழியில் பேசி ஓர் கைகுலுக்கல் மூலம் முடித்து விடுவார்கள் அல்லது,

பொலிஸை வரவழைத்து பிரச்சனையை தீர்த்து விடுவார்கள் ஏன் நாமும் இதை கடைப்பிடுக்க முடியாது இவ்வாறான மனிதநேயம் ஏற்காத செயல்களைச் செய்கிறோம் என எப்போது உணரப்போறீர்கள்.