பஸ் எரிச்ச கனவான்களே உங்கள் மீது இப்ப கொலை கேஸ்!

வவுனியாவில் நேற்றிவு இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் குடும்பம் பலியானமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் குறித்த பஸ்ஸிற்கு தீவைத்து கொழுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முகநூல்வாசி ஒருவர் பதிவிட்ட பதிவு இது….

சட்டத்தை கையில் எடுக்கும் கனவான்களே உங்களை சுற்றி எத்தனை கண்கள் இருக்கு என்பதனை தாண்டி எத்தனை செல்போன்கள் இருக்கின்றன என்பதனை பாருங்கள். அத்தனையும் உங்களுக்கு எதிரான சாட்சியங்களே ..

சட்டத்தை கையில் எடுத்தவர்கள் (வாகனத்தை எரிப்பது , கள்ளனை அடித்துக் கொல்வது ) தொடர்பில் பொதுவாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுப்பது முதலில் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுஜன ஊடகங்களில் வரும் வீடியோக்கள் , படங்களின் அடிப்படையில், அதில் அடையாளம் காணக்கூடியவர்களில் இருந்தே.

அந்த இடத்தில் குறுக்கமறுக்க சும்மா ஓடி திரிந்தவன், பேஸ்புக்ல படம், வீடியோ போட சொல்போனுடன் ஓடி திரிந்தவன், விடுப்பு பார்த்தவன் , அதில நின்று நியாயம் தொடர்பில் பிரசங்கம் வைச்சுக்கொண்டு இருப்பவர் , அங்க விசாரணைக்கு வாற பொலிஸ்காரரை இழுத்துப்போட்டு வதைப்பவர்கள் என்பவர்களை அடையாளம் கண்டே பொலிசார் கைது செய்வார்கள்.

சம்பவத்தின் தன்மையை பொறுத்தும் , பொலிசாருக்கு கொடுக்கப்படும் அழுத்ததை பொறுத்தும், ஐந்து பேரையோ அல்லது 100 பேரையோ கைது செய்து வழக்கு தொடர்வார்கள். இவ்வாறான வழக்குகளில் குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பது கடினம். அதனால் வழக்கு வருட கணக்கில் இழுபடும். வழக்கு முடிவுறும் வரையில் பிணையில் வெளி வந்து நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என அலைய வேண்டிய நிலைமை காணப்படும்.

அதேவேளை இவ்வாறான வழக்குகளில் செல்வாக்கு, பண வசதி உடையவர்கள் பொலிஸ் நிலையம் செல்லாமலேயே தப்பிக்க கூடியவர்கள் என்பதும் உண்டு. ஏனெனில் இதெல்லாம் கும்பலில் கோவிந்தா கணக்கு. அதில் ஒருத்தன் இரண்டு பேர் காச அடிச்சு தப்பிடுவான். பாதிக்கப்பட போவது என்னமோ அப்பாவிகள் தான்.

அதனால நான் என்ன சொல்கிறேன் என்றால் , சட்டத்தை கையில் எடுக்கும் வேலைக்கு போகாதீர்கள் போனால் சட்டம் உங்கள் மீது பாயும். அத்தோட விடுப்பு பார்க்க போவதை தவிர்ப்பது மிக நல்லது. சம்பவ இடத்தில் நின்றால் , அந்த இடத்தை விட்டு நகர்வது சால சிறந்து.

இருக்கிற இடமே தெரியாம இருந்துட்டு போங்க .

இது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவைப்படுவோர் , புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நடைபெற்ற கால பகுதியில் நீதிமன்றுக்கு கல் எறிந்தவன் என பிடிபட்டவனையும் , கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொன்றார்கள் என கைது செய்யப்பட்டவர்களையும் , ஊரில பொலிஸ், நீதிமன்றம் அலைபவனை கேட்டால் சொல்லுவாங்க.