பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

அரச பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அனைத்து அரசு பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணையில் பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்பவற்றில் பங்கேற்கின்றனர்

இந்த காலத்தில் அவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எனவே முதலாம் ஆண்டு தவணைப் பரீட்சைகளை ரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் முன்னரை போன்றே நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.