அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் வெறியாட்டம்! அப்பாவி இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்

வட்டவல – தியகல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வட்டவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி செயலாளரும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகனுமாகிய ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் அமில உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குண்டர் குழுவினரே தியகல தோட்ட இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் மைதானம் ஒன்றை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதனை செய்யக்கூடாது என எஸ்.சிவகாந்தன் என்ற இளைஞன் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரால் மிரட்டப்பட்டுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எனினும் அதனையும் மீறி விளையாட்டு மைதானத்தை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் ஆத்திரமடைந்த ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் குறித்த இளைஞரின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியகல மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள நிலையில் வட்டவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like