பட்டிருப்பில் கூட்டமைப்பிற்கு நெற்றியடி!! புகுந்து விளையாடிய யானை… படகு…

நேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்படி பட்டிருப்புத்தொகுதியில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வாக்குவங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஒப்பிட்டளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

2012இல் நடைபெற்ற மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 34705 வாக்குகளும், 2015 பாராளுமன்றத்தேர்தலில் 35535 வாக்குகளைப்பெற்ற தமிழ் தேசியகூட்டமைப்பு நேற்றைய தேர்தலில் பட்டிப்பளையில் 5304, போரதீவு 7904,களுவாஞ்சிக்குடி 14425 என மொத்தம் 27633 வாக்குகளையே பெற்றுள்ளது.

ஆண்ணளவாக 8ஆயிரம் வாக்குகளை இத்தேர்தலில் கூட்டமைப்பு இழந்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.2015 பாராளுமன்றத்தேர்தலில் 7937 வாக்குகளைப்பெற்ற நிலையில் நேற்றைய தேர்தலில் 12924 வாக்குகளைப்பெற்று தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

ஆத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 6354 வாக்ககளைப்பெற்று பட்டிருப்புத்தொகுதியில் காலூன்றியுள்ளது.

விசேடமாக தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்கூட்டணி 8455 வாக்குகளைப்பெற்றுள்ளது.

இக்கணக்கீட்டின்படி கூட்டமைப்பு தங்கள் சரி பிழைகளை அலசி ஆராய்ந்து தங்களை மறுசீரமைப்பு செய்யாவிட்டால் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் பட்டிருப்புத்தொகுதியில் பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like