யாழில் இன்று இரவு வாள்வெட்டுக்குழு அட்டகாசம் -மூன்று இடங்களில் தாக்குதல்

யாழ்.வண்ணாா்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

இன்று மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல்,

கடையை அடித்து நொருக்கியதுடன், உாிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 போ் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடாத்தியிருக்கின்றது.

குறித்த கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு கொக்குவில் மேற்கு வராகி அம்மன் கோவிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீதும், அதற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீதும் தாக்குதல் நடாத்தியிருக்கின்றது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

முகங்களை மூடியிருந்ததுடன், இலக்க தகடுகளற்ற மோட்டாா் சைக்கிளில் வந்த கும்பலே இந்த தொடா் தாக்குதலை நடாத்தியிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக பொலிஸாா் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like