ஒமந்தையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்… சிக்கிய அதிபயங்கர பொருட்கள்! இருவர் கைது

பிப்ரவரி25 ஆம் திகதி ஓமந்தை இராணுவ புறக்காவல் நிலையம் அருகே கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடற்படை மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அருகே நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை பரிசோதிக்கப்பட்டன.

அப்போஅங்கிருந்து சட்டவிரோத கிளைபோசேட் கொண்ட 1897 இரசாயன பொருள் பாக்கெட்டுகளை (189 கிலோ மற்றும் 700 கிராம்)மீட்டுள்ளனர்.

இந்தஇரசாயன பொருள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது இவ்வாறு கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் ஒரு சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் வேயங்கொடை பகுதியில்வசிக்கின்ற 49 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், வேன் வண்டி மற்றும்கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like