யாழ்ப்பாணத்தில் நடக்கும் அராஜகங்கள்! யாழில் மினிபஸ்காரன் C.T.B றைவருக்கு கொட்டனால் அடிக்கும் காட்சிகள் இதோ!! (Video)

காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ஆம் இலக்க வழியில் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த தனியார் பேருந்து சாரதி இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியை தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் (25) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11. 40 மணியளவில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை பேருந்து நிலையத்திலிருந்து 11 மணிக்கு யாழ் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து 11.25 மணிக்கு சுன்னாகத்தில் தரித்து நின்று 11.30 மணிக்கு இ.போ.ச பேருந்து வெளிக்கிட்டது.

இதன்போது, 11.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து வெளிக்கிட்ட தனியார் பேருந்து சுன்னாகத்தில் 11.30 தரித்து நின்று மீண்டும் 11 35 க்கு வெளிக்கிட்ட தனியார் பேருந்து சாரதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மினி பஸ்ஸின் பின் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த கொட்டனால் பேருந்து சாரதியை தாக்கியுள்ளார் இதனால் இலங்கை போக்குவரத்து சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகினார் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இருந்து மாலை வரை பிரச்சினைக்குரிய பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மாலை நேரம் பேருந்தை உரிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் சாரதிகள் செயற்பாடுகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் உள்ளமையினால், அதில் பயணிக்கும் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.