யாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக நிர்வாகத்துக்குட்பட்ட திணைக்களங்களில் 700 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்படலாம் என்று அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்புகள் 700 தாள்கள் பட்டதாரி பயிலுநர் நியமனம் வழங்கும் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுமுழுவதும் 53 ஆயிரம் பட்டதாரி பயிலுநர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத்தின் தனிப்பிரிவு இந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளன.

பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனங்களில் மத்திய அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட திணைக்களங்களுக்கு மாவட்ட செயலரும் மாகாண அமைச்சுகளுக்குட்பட்ட நியமனங்களை மாகாண ஆளுநர்களும் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் ஆசிரியர் நியமனங்கள் உள்ளிட்டவை மாகாண ஆளுநர்கள் வழங்கும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட திணைக்களங்களில் 700 பட்டதாரி பயிலுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிய முடிகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like