புத்தூர் சிறுப்பிட்டி மயானத்தில் சடலம் எரிக்க எதிர்ப்பு – மயானத்துக்கு அருகே பூதவுடலுடன் மக்கள் காத்திருப்பு

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நூற்றுக் கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

யாழ்.புத்துாா்- சிறுப்பிட்டி கலைமதி ஹிந்துப்பிட்டி மயானத்தில் சடலம் எாிப்பதற்கு எதிா்ப்புத் தொிவித்து பெதுமளவு மக்கள் மயான வாசலில் உட்காா்ந்து போராட்டம் நடாத்தும் நிலையில் அங்கு பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்திற்கு அருகில் உள்ள மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தபோதும் மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையில் , 2017ஆம் ஆண்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது

மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

அதன்பின்னர் இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் மனு மீதான இறுதிக் கட்டளை கடந்த நவம்பர் 8ஆம் திகதி வழங்கப்பட்டது.

இதன்போது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை ரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர்,

சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி கோரும் தரப்பு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் முன்வைக்கபட்டபோது .

மயானத்தைச் சுற்றி மதில் அமைத்து சடலங்களை அங்கு எரியூட்டலாம் என்றும், அதனை எதிர்த்தரப்புத் தடுக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டதுடன் அங்கு குழப்பம் விளைவித்தாலோ மதிலை உடைத்து அத்துமீறினாலோ அந்த தரப்புக்கு எதிராக பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like