இராணுவத்தினரின் வெறியாட்டம்! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு

ஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது குழப்ப நிலை ஏற்பட்டது.

சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் போது டிக்கட் பெற்றுக் கொள்ளும் இடத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.

இதன்போது இராணுவத்தினர், இலங்கை அணி ரசிகர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதற்கமைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அலகபெருமவை தொடர்பு கொண்டு, உடனடி விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வழங்கப்படவுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like