50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கும் பணிகள் ஆரம்பம் – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் உயர் கல்வி அரமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;

அரச துறையில் தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்களை வழங்கும் நடவடிக்கை ஜனாதிபதி செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடிதங்களின் பிரதிகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அனைத்து பட்டதாரிகளுக்கும் மார்ச் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 2021 மார்ச் 1ஆம் திகதி விரையில் பயிற்சிகள் வழங்கப்படும்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இக் காலப்பகுதியில் பயலுநர்களுக்கு 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன் பின்னர் அரச சேவை பயனுள்ளதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்காக சேவை நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நியமனத்தில் இவர்கள் 5 வருட காலம் பணியாற்ற வேண்டும் – என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like