சமமான வாக்குகள்: சித்தப்பா, மகனின் தலையெழுத்தை தீர்மானித்த சீட்டிலுப்பு

ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இளைஞர் ஒருவரினதும் அவரது சித்தப்பாவினதும் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கு சீட்டிப்பு நடத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு கட்சிகளில் இளைஞர் ஒருவரும் அவரது சித்தப்பாவும் போட்டியிட்டுள்ளனர்.

வாக்குகள் எண்ணப்பட்ட போது இருவரும் ஒரே அளவிலான சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பலாகல பிரதேச சபைக்குச் சொந்தமான தம்புலு ஹம்மில்லாவ என்னும் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சுரங்க ரத்நாயக்க போட்டியிட்டதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அனுர பிரசாத் ரத்நாயக்க போட்டியிட்டிருந்தார்.

இந்த இருவரும் 1681 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

இதன்படி அனுராதபுரம் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம். வன்னிநாயக்க முன்னிலையில் சீட்டிலுப்பு மூலம் ஒரு வேட்பாளர் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.