திருப்பூரில் 30 வயது பெண்ணை 14 வயது சிறுவன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா(30). இவர்களுக்கு கோமன்குமார்(6), சத்தியம் குமார்(4), துளசி குமார்(2) என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
பீகாரில் இருந்து தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வந்த இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறி அங்கு பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக மிதுன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பீகாருக்கு சென்றுள்ளார். மனைவி ஷீலா மட்டும் திருப்பூரில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஷீலாவின் வீடு வெகுநேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சடலத்தினைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்பு விசாரணையில் பல உண்மைகள் வெளியாகியதால் பொலிசாரே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் ஷீலாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளதால் கணவன், மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த சிறுவன் தனிமையில் இருப்பதற்கு ஷீலாவை தொந்தரவு செய்ததால் இந்த கொலை அரங்கேறியதாக சிறுவன் பகீர் வாக்குமூலத்தினை அளித்துள்ளார். தற்போது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.