யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் பிடிபட்டனர்!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தொலைக்காட்சி கேபிள் இணைப்புகளை துண்டித்தவந்தவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்

யாழ்ப்பாண குடாநாட்டில் நீண்டகாலமாக கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக போலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று வரை குறித்த கேபிள் இணைப்புகளைதுண்டாடுபவர்கள் தொடர்பில் பொலிசார் அசமந்த போக்குடன் செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் தொண்டமனாறு வல்வெட்டித்துறைப்பகுதியில் யாழ்ப்பாணத்து அரசியல்வாதி ஒருவரின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் வந்தவர்கள் குறித்த கேபிள் இணைப்புகளைதுண்டாடும் போது அருகில் உள்ள வீடொன்றில் குறித்த காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கேபிள் இணைப்புகளை வழங்கும் நிறுவனம் ஒன்றினால் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு சிசிடிவி ஒளிப்பதிவினையும் கையளித்துள்ளது குறிப்பாக அண்மைக்காலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கேபிள் வயர்கள் துண்டாடப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.