தனது புகைப்படம் அல்லது உருவம் பொறிக்கப்பட்ட படங்களை பிரபலமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உருவப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் நடைபாதைகளிலும், நிகழ்வு தளங்களிலும் மேற்பார்வை இல்லாமல் காட்சிக்கு வைக்கப்படுவது கண்கானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தது.
தன்னை ஓவியமாக வரையும் மக்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததோடு, அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
தனி ஒருவரின் புகைப்படங்களை பிரபல்யப்படுத்தும் வகையில் மக்கள் நடத்து கொள்வதை பாராட்ட முடியாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.






