வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்… சடலமாக தொங்கிய துணை நடிகை: இறுதியாக அக்காவிற்கு அனுப்பிய வீடியோ!

சென்னையில் துணை நடிகை தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதாகும் பத்மஜா என்ற துணை நடிகை சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவன் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

பத்மஜா தினமும் இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்ததால், அவருக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பவன் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள வீட்டில் வாலிபர் ஒருவருடன் பத்மஜா தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு பத்மஜாவிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் கதவு திறக்கப்படாமல், துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, பத்மஜா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், உடன் தங்கியிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அழுதுகொண்டே ‘நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் அக்கா’ என பத்மஜா பேசும் வீடியோ ஒன்று பெங்களூரில் உள்ள அவருடைய சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்தும் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.