இலங்கையில் உள்ள இந்துக் கோவிலொன்றில் இப்படியும் ஒரு அறிவுறுத்தல் – விமர்சிக்கும் வெளிநாட்டு தூதுவர்

இலங்கையில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு சென்ற பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய பின்லாந்துக்கான தெற்காசியாவின் தூதர் ஹரி கமரோன் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது மத வளாகத்தில் உள்ள ஒரு சிங்கள மற்றும் தமிழ் அறிவுறுத்தலில் , கோயில் வளாகத்திற்குள் அரைக்காற்சட்டையுடன் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரைக்காற்சட்டையுடன் செல்வதற்கு தடை எதுவும் இல்லை.மாறாக ஆங்கில மொழிபெயர்ப்பு சரியாக இல்லை என்றும், “கோவிலில் காற்சட்டைஅணியக்கூடாது” என்பதன் சிதைந்த பொருள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர்பதிவில் ஒரு குறிப்பில், “அப்படியானால் நீங்கள் ஒரு கோவிலுக்குச் செல்லும்போது என்ன செய்வீர்கள்”? என கேள்வி எழுப்பியுள்ளார்.