பாராளுமன்றை கலைக்குமாறு நாமல் கோரிக்கை

பாராளுமன்றை கலைக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கோரியுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மக்கள் இன்று நிராகரித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டை பிளவடையச் செய்தல், நாட்டுக்குள் சொத்துக்களை விற்பனை செய்தல், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தல் போன்றனவற்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் ஆணைக்கு தலை சாய்த்து அரசாங்கம் பாராளுமன்றை கலைக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

பாராளுமன்றை கலைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.