தமிழரசுக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் வரும் பிரபல சட்டத்தரணி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசாவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப் பட்டியலில் முதலிடத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பெயரை இடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.