வரலாற்றில் முதல் தடவையாக மாத்தறையில் தமிழர் ஒருவர் தெரிவு

வரலாற்றில் முதல் தடவையாக மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு போட்டியிட்ட நாகவேலு ராஜ்குமார் என்பவரே வெற்றிபெற்றுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் 917 அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.

மேலும், மாத்தறை மாவட்ட கொட்டப்பொல பிரதேசசபையில்,

பொதுஜன பெரமுன – 408

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 101

மக்கள் விடுதலை முன்னணி – 33 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like