மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதான கணக்காளர் நியமிப்பதில் நடைமுறைகளை மீறி கிழக்கு மாகாண சபையிலிருந்து முஸ்லீம் அதிகாரி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
ஆனால் மாகாண ஆளுநரின் முறையான கடிதம் இல்லாமல் சென்றதால் அங்கிருந்த அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், வழமையான பணியிலிருந்து கணக்காளர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன, ஆனால் மிகவும் திறமையான அவ்அதிகாரி இடம் மாற்றம் பெற்று செல்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், எந்த ஒரு காரணமும் இன்றி அவர் இடம் மற்றம் திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகின்றன.
இந்த இடமாற்ற பின்னணியில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டுள்ளமை தெளிவாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் பிள்ளையான்,கருணா மற்றும் வியாழேந்திரன் இந்த விடயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நியமனத்தில் மறைமுகமாக செயற்படுவது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆலோசகரும் – கட்சியின் மொழி பெயர்ப்பாளருமான அசாத்மௌலானா ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் முன்னாள் முதலமைச்சர் நசீர்அஹமதின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பில் கருணா பிள்ளையான் ,வியாழேந்திரன் தலைமறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்காது .






